Pages

Sunday 22 July 2018

இந்த ஆண்டின் மிகப்பெரிய #சந்திரகிரகணம் வரும் #விளம்பிவருடம் #ஆடிமாதம் 11ம்நாள் #ஜூலை 27ஆம் தேதி

#சந்திர_கிரகணம் !
இந்த ஆண்டின் மிகப்பெரிய #சந்திரகிரகணம் வரும் #விளம்பி வருடம் #ஆடிமாதம் 11ம்நாள்  #ஜூலை 27ஆம் தேதி #வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.

 அன்றைய தினத்தில்
நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் #ரெட்மூன்(RedMoon) என அழைக்கப்படுகிறது.
 #கிரகணம் ஏற்படும் நாளில் #பௌர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திர கிரகணம் 
 #சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

 சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர #கிரகணம் ஏற்படும்.

மிகப்பெரிய #சந்திரகிரகணம் 
 இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி
 சந்திர கிரகணம் மத்திம காலம் இரவு 01.52 மணி
 சந்திர கிரகணம் முடிவு காலம் இரவு 3.49 மணி

கோவில் 
 சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27ஆம் தேதியன்று, திருப்பதி கோவில் 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக #தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 கிரகண நேரத்தில் அனைத்து கோவில்களின் நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த உடன், கோவிலை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் நடை திறக்கப்படும்.

 இதேபோன்று வீட்டில் உள்ளவர்களும் கிரகண நேரத்தில் பொதுவாக எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். #கிரகணம் முடிந்த பின் வீடு முழுக்க சுத்தம் செய்தபின் உணவை உட்கொள்வார்கள்.

#வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குள் #சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.

 பெளர்ணமி #திதிச்ரார்த்தம் மறு நாள் #சனிக்கிழமை செய்யவேண்டும்.*.    

 #பூராடம், #கார்த்திகை, #உத்திரம், #உத்ராடம், #திருவோணம், #ரோஹிணி, #ஹஸ்தம், #அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், வெள்ளிக்கிழமை பிறந்தவர்களும் மறு நாள் சனிக்கிழமை #சாந்தி செய்துகொள்ளவும்.

 #கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரைசந்திரனை பார்க்க கூடாது

No comments:

Post a Comment

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

il

il