Pages

Saturday 21 July 2018

தெருநாய்களுக்காக 56 ஆண்டுகள் காப்பகம் நடத்தி வரும் மூதாட்டி

தெருநாய்களுக்காக 56 ஆண்டுகள் காப்பகம் நடத்தி தள்ளாடும் வயதில் தான் இறந்ததால் நாய்கள் அனாதைகள் ஆக கூடாது என்பதற்காக நாய்களை அரசு விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்த ஆதரவற்ற மூதாட்டியின் மனித நேயம் குறித்த செய்தி தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்
பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா பீபி கணவனை இழந்து தனிமையில் வசிக்கும் இந்த மூதாட்டி கடந்த 56 ஆண்டுகளாக தனது வீட்டில் தெருநாய்களுக்கான காப்பகம் நடத்தி நடத்தி வருகின்றார் தெருவோரம் கிடக்கும் பெண் , ஆண் நாய்கள் மற்றும் காயமடைந்து , நோய்வாய்பட்டு தெருவோரங்களில் வீசபடும் நாய்களை தத்தெடுத்து தனது வீட்டில் வைத்து
வளர்த்து வந்தார் தனது முதியோர் ஓய்வூதிய பணத்தில் இந்த நாய்களுக்கான பிஸ்கட் போன்ற  உணவுகளை வழங்கி வந்தார் சில நாட்களுக்கு முன் இந்த மூதாட்டி அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தார்  தொடர்ந்து குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் தொடர்ந்து நாய்களை பராமரிக்க முடியாத காரணத்தால் இந்த நாய்களை காப்பகத்தில் சேர்க்க உறவினர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து மேனகா காந்தி க்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதி மேனகா காந்தி மாவட்ட ஆட்சியருக்கு இந்த நாய்களை அரசு விலங்குகள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததன் பேரில் பிராணிகள்வதை தடுப்பு சங்க செயலாளர் கிருஷ்ண மணி தலைமையில் அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி செயலாளர் உட்பட ஊழியர்கள் , சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து அந்த வீட்டில் இருந்த 26 பெரிய நாய்கள் , 6 குட்டி நாய்களை மீட்டு குமார கோயில் பகுதியில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் சேர்த்தனர் அப்போது இந்த நாய்களுக்கா வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த கட்டு கட்டான பிஸ்கட் பாக்கெட்களை கண்ணீருடன் அந்த அதிகாரிகளிடம் கொடுத்து நாய்களை பிரியும் சோகத்தில் வழி அனுப்பி வைத்தார் அந்த மூதாட்டி.

மனித நேயமே கேள்வி குறியாகி வரும் இந்த உலகில் நாய்களுக்கு காப்பகம் நடத்தி அந்த நாய்களை சொந்த குழந்தைகளை போல் பராமரித்து வளர்த்துதான் தள்ளாத வயதில் நோய்வாய்பட்டும், விபத்தில் ஏற்பட்ட காயத்தாலும் தான்இறக்க நேரிடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்ட நிலையில் இந்த நாய்களை அனாதைகள் ஆகி விட கூடாது என்ற எண்ணத்தில் தனது தீவிர முயற்சி காரணத்தால் அரசு காப்பகத்தில் நாய்களை ஒப்படைத்த இந்த மூதாட்டியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர்.


#பகிர்வு

No comments:

Post a Comment

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

il

il