Pages

Sunday, 22 July 2018

கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்

உடம்பின் நடுப்பகுதி வயிறு.
அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது. 
இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.

தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள்
மரணம் வரும்.

ஒரு மனிதன் 
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான்
இந்த நாற்பது.

நிறைய வேலை செய்வதால் 
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.

என்ன நடக்குமோ என்ற 
பயமும் கவலையும்தான் 
மனிதன்மீது பாரமாக இறங்கி 
அவனை நொறுக்கிவிடுகின்றன.

பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை 
சீராக நிறைவேற்றுங்கள்.

அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

தினசரி மத்தியானம் 
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.

பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனை நினையுங்கள்.
" இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.
நான் தப்பு பண்ண விடாதே அப்பா."
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.

டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
பென்ஷன் வாங்கலாம்.

ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.

அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !


No comments:

Post a Comment

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

il

il